நடிகர் அமீர், எம்.எல்.ஏ., தனியரசு மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார்

கோவை: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அமீர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.

கோவையில் நேற்று நடந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அமீர், பல்வேறு கருத்துக்களை மேடையில் பேசினார். இதற்கு, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதால், அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். 

இதையடுத்து, கனியூர் சுங்கச்சாவடி அருகே அமீர் மற்றும் எம்.எல்.ஏ., தனியரசு சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.,வின் மாநகர மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் சிலர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடிகர் அமீர் பேசியுள்ளார். இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் அவரது பேச்சு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தனியரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையிலும் பேசியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...