கோவையில் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான 'வாசிப்பை நேசிப்போம்' நிகழ்ச்சி

கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.



கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.

இளம் பத்திரிக்கையாளர்கள் வாசிப்பு தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை பிரஸ் கிளப், அறிவுக்கேணி மற்றும் வாங்க படிக்கலாம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இன்றைய காலகட்டத்தில் புத்தகத்தின் தேவையையும், அதன் வலிமையையும் இளம் பத்திரிகையாளர்கள் உணரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது.

இதில் அறிமுக உரையாகப் பேசிய எழுத்தாளர் சி.ஆர். இளங்கோவன் கூறும்போது:- நான் கல்லூரி காலம் முடிந்த பின்பு கோவையின் வரலாறு என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். அதன் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் புத்தகத்தில் இருந்த கோவையின் தகவல்களை என்னிடம் ஆழமாகக் கேட்டனர் இதனால், இன்னும் தகவல்களை தேடி அலைந்தேன். பின்னர் தொடர்ச்சியாக புத்தகங்கள் எழுதினேன், என்றார்.

தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். கே. விஜயகார்த்திகேயன் பேசுகையில்," டாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரி, எழுத்தாளர் என்பதை எல்லாம் விட வாசிப்பதின் மூலம் சமூகத்தில் முன்னேறிய மாணவனாக இருப்பதை நான் பெருமை கொள்கிறேன். சமூக விழிப்புணர்வுக்கு சாவியாக இருப்பது புத்தகம்தான். ஆகவே, வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தகவல் என்பது ஒரு ஆயுதமாக உள்ளது," இவ்வாறு கூறினார்.



தேசிய விருது பெற்ற பத்திரிக்கையாளர் சே. சேவியர் செல்வகுமார் கூறியதாவது :- இளம் பத்திரிகையாளர்கள் புத்தகங்களை அதிகமாக வாசிக்க வேண்டும். நாங்கள் இளம் வயதில் படித்த புத்தகங்கள் தான் இன்று எங்களை வளமைப்படுத்தியுள்ளது. துல்லியமாக செய்திகளை பதிவு செய்ய வாசிப்பு அவசியம். "சிறுவாணி புத்தகம்" கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும், என்றார். இந்த நிகழ்ச்சியில் இளம் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...