சிறுவாணி சாலையில் மேலும் 9 மரங்கள் அகற்றும் முடிவு கைவிடல்

கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஏற்கனவே பல மரங்கள் வெட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 9 மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.


கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ஏற்கனவே பல மரங்கள் வெட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 9 மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது. 



போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலை, அவிநாசி, திருச்சி, பொள்ளாச்சி, பாலக்காடு, சத்தி மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற முக்கிய சாலைகளையும் இணைப்பதில்லை. எனவே, மரங்களை வெட்டி, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 83 மரங்களை மட்டுமே அகற்ற முடிவு செய்தனர். 

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் ஆய்வு நடத்திய நெடுஞ்சாலை அதிகாரிகள், மேலும் 39 மரங்களை வெட்டாமல், சாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது ஓசை அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 



இதையடுத்து, மேலும், 9 மரங்களை அகற்றாமல் சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...