தேசிய படுக பார்ட்டி சார்பில் வரும் 13-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது.

நீலகிரி: பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தேசிய படுக பார்ட்டி அறிவித்துள்ளது. 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக, தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், தேயிலை விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய விலை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், பசுந்தேயிலைக்கு உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் 13-ம் தேதி குன்னூரில் செயல்பட்டு வரும் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக தேசிய படுகர் பார்ட்டி அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு துவக்கி வைக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...