சிவில் நீதிபதி தேர்வு: கோவையில் முன்னேற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம்

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாட்டுப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பி.கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையில் இன்று ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நாளை சிவில் நீதிபதி (Civil Judge Examination ) பதவிக்கான போட்டித் தேர்வானது கோயம்புத்தூர், சித்தாபுதூரிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரங்கநாதபுரத்திலுள்ள மாநகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி சுமார் 949 எண்ணிக்கையாலான தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.

தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுதத் தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...