நீட் விவகாரம்: கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வால் மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பியடி ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், மாணவிகளின் மரணத்திற்கு நீதி வேண்டியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


Video: Laxman

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...