ஜாதியை கூறி குடியரசு தலைவரை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே அனுமதி மறுத்ததை கண்டித்து கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே அனுமதி மறுத்ததை கண்டித்து கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் புஸ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்றபோது தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சார்ந்தவர் என கூறி கோவிலின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைக் கண்டித்து கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியரசு தலைவரை கோவிலினுள் அனுமதிக்காதது மனித உரிமை மீறல் எனவும் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவரையே அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் கோஷங்களை எழுப்பினர்.



மேலும், மத்திய அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டத்தை திருத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Video: Laxman

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...