பத்து வயது சிறுமையை கடத்த முயற்சி: பொதுமக்களிடம் சிக்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 5 வகுப்பு மாணவியை கடத்திச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

காங்கேயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ஒரு வடமாநில வாலிபர் பேச்சு கொடுத்தபடி நடந்து வந்தார். 

பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பிஸ்கட் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு சென்னிமலை சாலை வழியாக நடந்து சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தேகம் அடைந்து சிறிது தூரம் விட்டு பின்பு இருவரையும் தடுத்து விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அழைத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்த இளைஞர் பீகாரை சேர்ந்த ஜீஜிந்திரன் (25) என்பதும், பழைய கோட்டை சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்வதும் தெரியவந்தது. 

மேலும், அவர் மாணவியை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. பின்னர், மாணவியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக, காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீஜிந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...