பணத்தை தவறவிட்ட நபரிடம் தேடி பிடித்து ஒப்படைத்த கோவை போலீஸ்

கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் முப்பத்து ஒன்பதாயிரம் பணத்தை தவறவிட்ட நபரை தேடி பிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்சவர் ஜான் கெண்ணடி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் இவர் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பைக்கில் வைத்திருந்த முப்பத்து ஒன்பதாயிரம் ரொக்க பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம், எ.டி.எம் கார்டு ஆகியவற்றை தவறவிட்டு சென்றுவிட்டார். 

இந்த நிலையில், நேற்று மதியம் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் பாலசுப்பரமணி என்ற உதவி ஆய்வாளர், பயிற்சி காவலர் அருள்முருகன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் ஒரு பை தனியாக கிடைப்பதை பார்த்தனர். பின்பு அதனை சோதனை செய்த போது அதில் முப்பத்து ஒன்பதாயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. 

பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பையில் இருந்த வங்கி புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி அந்த பணம் ஜான் கென்னடியுடையது என உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி பணத்தை ஒப்படைத்தனர்.

காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...