பொது இடத்தை பூங்காவாக மாற்ற களமிறங்கிய கோவை இராமலிங்க நகர் குடியிருப்பு வாசிகள்

கோவை: வார்டு எண் 12 மற்றும் 13-க்கு உட்பட்ட ராமலிங்க நகர் பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்ற அப்பகுதி மக்கள் களமிறங்கியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.


கோவை: வார்டு எண் 12 மற்றும் 13-க்கு உட்பட்ட ராமலிங்க நகர் பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்ற அப்பகுதி மக்கள் களமிறங்கியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு எண் 12 மற்றும் 13-க்கு உட்பட்ட ராமலிங்க நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 3 சென்ட் அளவிலான பொது இடம் பராமரிப்பின்றி புதர் மணிடிக்கிடந்தது.



அதனை சுத்தம் செய்ய களமிறங்கிய ராமலிங்க நகர் குடியிருப்பு நல சங்கத்தினர், பில்டிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்புடன் இணைந்து பொது இடத்தை ஆக்கிரமித்திருந்த களைச் செடிகளை, குடியிருப்பு வாசிகளின் ஒத்துழைப்போடு சுத்தம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதுகுறித்து ராமலிங்க நகர் குடியிருப்பு நல சங்கத்தின் செயலாளர் விஜயராகவன் பேசுகையில், "சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குடியிருப்பு சங்கம் சார்பாக நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பயணங்களின் போது குப்பைகளை பொது வெளியில் தூக்கி எரிவதை தடுக்க, சிறிய அளவிலான துணிப்பைகள் குடியிருப்பு வாசிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 



அதைத் தொடர்ந்து, பல மாதங்களாக பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை சுத்தம் செய்து, மரக் கன்றுகளை நட்டுவைத்துள்ளோம். மேலும், முதியோர்களும், குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் இந்த இடத்தை அழகான பூங்காவாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

கடந்த வருடம் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு 'குப்பையில்லாத குடியிருப்பு பகுதி' என ராமலிங்க நகர் காலனி பெயர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...