கோவை எஸ்.என்.ஆர். மைதானத்தில் 3-வது டி..என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள்..?

கோவை: 3-வது சீசன் டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். மைதானத்திலும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை: 3-வது சீசன் டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். மைதானத்திலும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த ஆண்டு நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டி.என்.பி.எல்., கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

3-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் போட்டி ஜூலை 11-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், சீசெம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2 சீசன்களின் ஆட்டங்கள் திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வந்தன. 

இந்த நிலையில், முதல்முறையாக கோவையில் டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக நடப்புச் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸின் துணை பயிற்சியாளர் அவினாஷ் கந்தேவால் கூறுகையில், "தற்போது கோவையில் மாவட்டம் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆதரவு சரியான பாதையில் செல்கிறது. கடந்த சில நாட்களாக நமது கோவையில் இருந்து சிறந்த வீரர்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. கடந்த 2 சீசன்களில் கோவை வீரர்களை டி.என்.பி.எல்., அணிகள் எடுத்துள்ளன. குறிப்பிட்ட சில வீரர்கள் பெரிய அளவிலான லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். ரஞ்சி டிராபி, யு16, யு19 அல்லது தமிழக யு23 அணிகளில் கோவையைச் சேர்ந்த 4 வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

தற்போது, கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். மைதானம் சிறந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள 5 டர்ஃப், தலா 2 கான்கிரிட் மற்றும் மேட் பிட்சுகள், வீரர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள மிகவும் உறுதுணையாக உள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் வரைபடத்திற்குள் கோவையும் இனி இடம் பெறுவதில் மகிழ்ச்சி," என்றார். 

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவிற்கு கோவை கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.என்.பி.எல்., போன்ற மாவட்ட அளவிலான போட்டிகளையோ, மாநில அளவிலான கிரிக்கெட் ஆட்டங்களை நேரடியாக காண, கோவை மக்கள் பணத்தை செலவு செய்து வெளியூறுகளுக்கு சென்று ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுபோன்ற முயற்சிகளால், கோவையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு நேரம் மற்றும் பணம் மிச்சமாவதுடன், ஆட்ட நுணுக்கங்களையும் நேரில் பார்த்து, தங்களை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...