நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற விஜய்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல்

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி பேரணி நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு தமிழக அரசியல் தலைவர்களும் பல்வேறு நல அமைப்புகளும் தங்களது எதிர்ப்பையும் ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய், மினி சகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார். 



அதே போன்று திரேஸ்புரத்தில் உள்ள ஜான்சியின் வீட்டிற்கும், சாயர்புரம் பேய்க்குளத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியதோடு நிதி உதவியும் செய்தார்.



பின்னர், தனியார் விடுதியில் தங்கிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...