தென்மேற்கு பருவமழைக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை : தென்மேற்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : தென்மேற்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களான கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, இ.எஃப்.ஐ., கோயமுத்தூர் மற்றும் குயிப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

 



அப்போது, சித்திரைச்சாவடி வாய்க்காலில் இருந்து வரக்கூடிய முதல் குளங்களான புதுக்குளம் மற்றும் கோளரம்பதி குளங்களின் வாய்க்கால் சுருங்கியிருப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்று அகலப்படுத்தி மதகுகளை தூர்வாரி சரிசெய்வதாக பொதுப்பணித்துறை பொறுப்பெடுத்துக் கொண்டது.

 கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, முத்தனன் குளம் மற்றும் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியிருப்பதால், சித்திரைச்சாவடி வாய்க்காலில் சிறு தடுப்பு ஏற்படுத்தி நரசம்பதி குளத்திற்கு தண்ணீர் திருப்ப நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. 



மேலும், செல்வசிந்தாமணி - உக்கடம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் கோயமுத்தூர் வாய்க்காலில் தூர்வாரவும், வெள்ளலூர் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது எடுக்கப்பட்ட கழிவுகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெள்ளலூர் குளத்தில் உள்ள 200 வீடுகள் ஆக்கிரமிப்பினை தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக அகற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு குடிசைமாற்று வாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், குளங்களில் நீர் நிரப்பவும், நிரம்பிய குளங்களில் இருந்து நீர் வெளியேற தேவையான அதன் வழிகளையும் சரி செய்ய எல்லா வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிங்காநல்லூர் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறைக்கும், அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மழைக்கு முன்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளை முடுக்கிவிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்களின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துளசி செடி பரிசாக கொடுக்கப்பட்டது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...