உணவு வணிகர்கள் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் கட்டாயமாக உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு பெற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் கட்டாயமாக உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு பெற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

மாவட்டத்திலுள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பவர், விநியோகிஸ்தர்கள், முகவர்கள், மளிகை கடைக்காரர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், மறுபொட்டலமிடுபவர்கள், சாலையோர நடமாடும் உணவு வணிகர்கள், ஹோட்டல்கள், கேண்டின், பேக்கரி மற்றும் தேநீர் விடுதிகள் உரிமம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு காலக் கெடு முடிந்து விட்டது. 

உரிமம் மற்றும் பதிவு பெறாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 பிரிவு 63-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரிமம் பதிவு பெற்றவர்கள். அதனை நுகர்வோருக்குத் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும். 

உணவு சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...