நீட் தேர்வு முடிவுகள்: முதல் 50 இடங்களில் தமிழகத்துக்கு ஒரே இடம் - கேரளத்துக்கு அதுவுமில்லை..!

டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.

டெல்லி: வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படியில் முதல் 50 இடங்களைப் பெற்றவர்களில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தமிழக மாணவி பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேரும், நாடு முழுவதும் 12,69,922 பேரும் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. முடிவுகளின் அடிப்படியில், 7,14,562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்வெழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

50 இடங்கள்

நீட் தேர்வில் முதல் ஐம்பது இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் ஐம்பது இடங்களை தமிழகத்தை சேர்ந்த வேறு எந்த மாணவர்களும் பிடிக்கவில்லை. இதில் டெல்லி அதிகபட்சமாக எட்டு இடங்களைப் பிடித்துள்ளது. 6 இடங்களைப் பிடித்து குஜராத் மாநிலம் அடுத்த இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் 5 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது.





கல்வி பெற்றவர்கள் விழுக்காட்டில் நாட்டிலேயே என்றும் முதலிடம் பிடிக்கும் கேரளா மாநிலம் இந்த முதல் ஐம்பது இடங்களில் ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அதே நேரத்தில், தேர்வு எழுதியவர்களில் 67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...