கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: தமிழக கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை அகற்ற வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கிருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலாகின. ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலிருந்த கடையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கான காரணம் என்று கூறப்பட்டது. 



இது போன்ற விபத்துகள் வேறு எந்தக் கோயிலிலும் ஏற்படக்கூடாது என்று அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36,000 கடைகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை இதனை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில் தமிழக கோவில்களுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்நிலையில், கடைகளை அகற்ற மேலும் கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவது கடினம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வரும் ஜனவரி 1-ம் தேதிக்கு முன்னதாக கடைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கடை உரிமையாளர்கள் நான்கு வார காலத்திற்குள் விண்ணப்பித்தால் மாற்று இடம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...