மேட்டுப்பாளையத்தில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாகும் பரிதாபம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டைக்காரர்கள் வைக்கும் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாவதை தடுக்க வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டைக்காரர்கள் வைக்கும் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வாயில்லா ஜீவன்கள் பலியாவதை தடுக்க வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இலுப்பநத்தம் என்னும் கிராமத்தில் இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நடராஜன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று வேட்டைக்காரர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி அதன் தாடைப்பகுதி முழுவதும் சிதறி உயிரிழந்தது.



இது குறித்து, நடராஜன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். மூன்று மாத சினையுடன் உள்ள பசுமாடு கொடுமையான முறையில் இறந்துள்ளது என வேதனை தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள், "வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாடும் கும்பல் இது போன்ற ஆபத்தான வெடிகுண்டுகளை மறைத்து வைக்கின்றனர். இதனை மனிதர்கள் அறியாமல் மிதித்தாலும் வெடித்து கால்களை இழக்க நேரிடும்." என்றனர்.

இதே போன்று மற்றொரு அதிர்ச்சியாக இன்று கோவையில் உள்ள நரசீபுரம் பகுதியில் பன்றிக்கு வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி ஒன்றரை வயது குட்டி காட்டு யானையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த தகவல் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெடிகுண்டு

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், "சற்று அழுத்தம் கொடுத்தாலும் பயங்கரமாக வெடித்து சிதறும் வகையில் இந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது." வெடி மருந்தை உருட்டி அதனை சுற்றி சிறு சிறு வெங்கிக்சான் கற்கள் என்னும் வெள்ளை நிற கற்களை போட்டு அதன் மீது மக்கா சோளமாவு அல்லது கோழி குடல், மாட்டு இறைச்சியின் கொழுப்பு போன்றவற்றை சுற்றி இந்த வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது.

இதன் வாசத்தின் காரணமாக காட்டுப்பன்றி இதனை கடித்தால் உடனடியாக தலை சிதறி இறந்து விடும். அவுட்டுக்காய் என்றழைக்கப்படும் இந்த நாட்டு வெடியில் சிக்கி கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு காட்டு யானைகள் பலத்த காயமடைந்து ஓரிரு தினங்களில் இறந்து போன சம்பவகங்ளும் நடந்துள்ளன.

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதிகளில் இந்த வேட்டை கும்பல் அதிகளவில் நடமாடி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பலத்த காயத்தோடு அடர்ந்த காட்டுக்குள் ஓடி உணவு உண்ண இயலாமல் இறப்பது கணக்கிலேயே வருவதில்லை.

என்றாவது ஒருநாள் மட்டும் வேட்டையில் ஈடுபடுவோரை பிடித்து வழக்கு போடுவது என்பதோடு இல்லாமல், தீவிர விசாரணை நடத்தி இது போன்ற வேட்டைக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...