மேட்டுப்பாளையத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி: எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சிலர் எஸ்.பி.ஜ வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சிலர் எஸ்.பி.ஜ வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கெம்மநாயக்கன்பாளையத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு மில் அதிபர்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் வங்கியின் அபாய சங்கு ஒலித்தது.



இதனையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு செல்கையில் வங்கியில் இருந்து மர்ம நபர்கள் ஓடியுள்ளதை பார்த்தனர். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் வங்கியின் முன்பக்க ஷட்டரை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து லாக்கரை உடைக்க முயன்றதும், அப்போது அபாய ஒலி ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. 



மேலும், வங்கியில் பதிவான ரகசிய காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ள போதும் காவலாளி இல்லாததால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும், கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேரத்தில் போலீசார் அதிகளவில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...