கிணற்றில் விழுந்த கறவை மாடு 2 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணி. இவரது தோட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல, கால்நடைகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில், ஒரு கறவை மாடு விவசாய நிலத்தின் அருகிலிருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக உரிமையாளர் பாலசுப்ரமணித்திற்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.



அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கறவை மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 40 அடி ஆழம் என்பதால், மிரண்டிருந்த மாடு மிகவும் முரண்டு பிடித்தது. இதனால், மீட்டை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி மாட்டினை உயிருடன் மீட்டனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...