பழகுநர் உரிமம் வழங்க லஞ்சம்: வட்டார போக்குவரத்து அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூரில் பழகுநர் உரிமம் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறி வட்டார போக்குவரத்து அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் அதிகப்படியான வாகன பதிவுகளும், ஒட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை பழகுநர் மற்றும் ஒட்டுநர் உரிமம் பெற வந்தவர்களிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அறை முன்பு திரண்ட பொதுமக்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்த்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் மூலம் வந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. பொதுமக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அலுவலர் உறுதியளித்ததின் பேரில், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தின் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...