கோவை புதிய மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலக் கட்டுமான பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பாலம் கட்டுமான பணிக்கு வேலைக்கு வடமாநில தொழிலாளியான ராஜேந்திர சிங் என்பவர் சென்றார். பாலத்தின் மேல் பகுதியில் பணிக்கு சென்றவர், அங்கிருந்த கம்பியில் துணி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.



இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்கள், இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், வட மாநில தொழிலாளர்கள் உதவியுடன் ராஜேந்திரசிங்கின் பிரேதத்தை கீழே இறக்கினர். தொடர்ந்து, உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், வடமாநில தொழிலாளி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Video credit: Laxman

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...