காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் : மத்திய அரசு தாக்கல் செய்த திட்டத்தின் விபரங்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. 

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் வரைவு செயல்திட்டம் (‘ஸ்கீம்’) ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மார்ச் 29-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மேலும் ஒருமனுவை மட்டுமே தாக்கல் செய்தது. இதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது. கர்நாடக சட்டசபை தேர்தலைக் காரணம் காட்டி, மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. அப்போது, மத்திய அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி, வரைவு செயல் திட்டத்தை 14-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது, வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த வரைவு செயல் திட்டம் குறித்து தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா..? குழுவா..? அல்லது முகமையா..? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது.

இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தைப் பகிர்ந்து கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 

வரைவுத்திட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டு உள்ள முக்கிய விவரம் வருமாறு:- 

* உருவாக்கப்படும் காவிரி நீர்ப்பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர்.

* மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயது வரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார் 

* 10 பேர் கொண்ட நீர்ப்பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார் 

* 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்

* குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் 

* காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும். காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...