நீலகிரியில் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் மற்றும் குதிரை பந்தய போட்டிகள் தொடங்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவிற்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் குதிரை பந்தய போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவிற்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் குதிரை பந்தய போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோடை விழாவின் கலை நிகழ்ச்சிகள் அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் தொடங்கியது. இந்த கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். முதல் நாளான இன்று ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சிகள் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.



குதிரை பந்தயம்

நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குதிரை பந்தயமானது ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 132-வது குதிரை பந்தயம் போட்டிகள் இன்று தொடங்கியது. மொத்தம் 28 நாட்கள் நடைபெறும் குதிரை பந்தயம், இந்த ஆண்டு 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



சர்வதேச தரத்திற்கு ஈடாக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமின்றி, இந்த போட்டியை காண வரும் சுற்றுலா பயணிகளின்  வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் குதிரை பந்தய போட்டிகள் உள்ளூர் மக்களை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரை பந்தய ஆர்வலர்களுக்கு ஓர் சிறந்த பொழுது போக்கு அம்சமாக அமைந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...