சிறந்த விதை தொழில்நுட்பத்தில் தேசிய அளவிலான விருதைப் பெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலை.,

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையத்திற்கு, தேசிய அளவிலான சிறந்த விதை தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கான விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையத்திற்கு, தேசிய அளவிலான சிறந்த விதை தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கான விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் தேசிய விதைத் திட்டத்தின் 33-வது வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விதைத் திட்டத்தின் 13-வது வருடாந்திர ஆய்வு கூட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்ற இக்கூட்டத்தில்  அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மாநில வேளாண்மைப் பல்கலைக்கழக விதை அறிவியல் துறை விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆராய்ச்சி கூட்டத்தில், இந்திய அளவில் விதை தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மேற்கொண்ட 24 மையங்களில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 'விதை மையம்' சிறந்த ஆராய்ச்சி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதைப் புதுச்சேரி மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், விதை மையத்தின் தனி அலுவலர் (விதைகள்) பொ. செல்வராஜூவிடம் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் உதவி பொது இயக்குனர் (விதைகள்) எஸ்.கே. யாதவ், திட்ட இயக்குநர் (தேசிய விதை திட்டம்) பி.கே. அகர்வால், காரைக்கால் பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வி. கந்தசாமி மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மைய விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...