கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு 'யூரோபெல்டிஸ் பூபதி'

கோவை : கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புவிற்கு 'யூரோபெல்டிஸ் பூபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புவிற்கு 'யூரோபெல்டிஸ் பூபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் பி.எச்.டி படித்த வி.ஜே. ஜின்ஸ் என்பவர் கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதியில் யூரோபெல்டிஸ் வகை பாம்பினத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாம்பின் வகைகளில் தனது எழுந்த சந்தேகங்களை ஆராயத் தொடங்கினார். 

இதன்மூலம், உடலமைப்பு, செதில்களைக் கொண்டு பாம்புகளை வகைப்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தார். இது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

சுமார் 40 செ.மீ. நீளமுள்ள பாம்புகள், அதன் வயிற்றுப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செதில்களை வைத்திருக்கும் என்பதை தெரிந்து கொண்டார். ஆனால், செல்டைல்ஸ் வகை இதற்கு மாறாக இருந்தது. "இந்த வகை உயிரினங்கள் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிற பாம்புகளை ஒப்பிடுகையில், செல்டைல்ஸ் விநோதமானது," என சிம்ப்ளிசிட்டிக்கு அவர் கூறினார். 

மண்புழுக்கள் போன்ற பாம்பினங்கள் மழைக்காலங்களில் அதன் இருப்பிடத்தில் இருந்து வெளியேரும். இந்தியாவில் பெனின்சுலார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் விஷமில்லா பாம்புகள் காணப்படுகின்றன. நாடு முழுவதும் ஏராளமான பாம்பினங்கள் உள்ளன. அவற்றின் வகை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், அதன் இனத்தை அடையாளம் காண்பதில் பொதுவாக சாதாரண மனிதர்களுக்கு சிக்கல் எழும்.

"சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மைய வளாகத்தில் 10 முதல் 15 பாம்புகள் மழைக் காலங்களில் சுற்றித் திரிகின்றன. அவைகள் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாருக்கும் தொந்தரவு அளிக்காத வகையில் வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலான இடங்களில் பல்வேறு வகையான பாம்பினங்கள் உள்ளன. மனிதர்கள் அதனை காண்பது அரிதான ஒன்றாக இருந்தாலும், அரிய வகை பாம்புகளை அவர்களால் அடையாளம் காண முடியாது. 

ஏனெனில், பாம்பில் ஏராளமான வகைகள் உள்ளன. குறிப்பாக, யுரோபெல்டிஸ் இனங்கள் குறித்த விரிவான தகவல்கள் ஏதும் இல்லை. எனவே, ஒருமுறை அந்த பாம்பினங்களை அடையாளம் கண்டால், அந்த முறையை வைத்தே மீண்டும் அதனை அடையாளம் காண முடியும்," என்றார் ஜின்ஸ்.

தற்போது, ஆனைகட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செல்டைல்ஸ் வகை பாம்பு, இந்தியாவில் இருக்கும் 41-வது பாம்பாகும். இதன் எண்ணிக்கை மற்றும் நடமாட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருப்பதாக வி.ஜே. ஜின்ஸ் தெரிவித்துள்ளார். யூரோபெல்டிஸ் பூபதி' பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் ஜுட்டாக்ஸா மேகஸினில் இடம்பெற்றுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...