பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் வேண்டும்: டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநில செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பூரண மது விலக்கு கொள்கை காரணமாக 7,000 டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்தி கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மதுபான விற்பனை பணத்தை செலுத்தச் செல்லும் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் செல்வதைத் தடுக்க ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் அளிக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சுப்புராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாளருமான ஆறுமுகம், டாஸ்மாக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...