6 நாட்களாக நீடித்த தோட்டக்கலைப் பண்ணைத் துறை ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் 6 நாட்களுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் 6 நாட்களுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. 



தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களும், 10-க்கும் மேற்பட்ட பண்ணைகள் உள்ளன. இவற்றில், சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்கள் (தினக்கூலி) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நாளொன்றுக்கு ரூ. 250 மட்டுமே வழங்கப்படுகிறது. இது தவிர நிரந்தர பணியாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களாகப் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தோட்டக்கலைத்துறையே, தமிழக அரசோ கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால், இப்போராட்டம், 6-வது நாளாக நீடித்து வந்தது. 

இந்நிலையில், இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும், மேலும், கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதால், எதிர்வரும் மலர் கண்காட்சிக்கு முதலமைச்சர் வருவதற்கு முன்போ அல்லது அவர் வந்த பிறகு அறிவிப்பார் என உறுதியளிக்கப்பட்டது- இதைத்தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாகத் தெரிவித்தனர். பின்னர், மீண்டும் அவரவர்களின் பண்ணை மற்றும் பூங்காக்களுக்கு பணி செய்ய திரும்பினர். இதனால், ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சிக்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...