தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அவ்வப்போது இடி-மின்னலுடன் கூடிய கன மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 12 செ.மீ. மழை பதிவானது. அதே போல, தமிழகத்தில் அதிபட்சமாக திருத்தணியில் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பம் கடுமையாக நிலவி வருகிறது.

இதனிடையே, வடக்கு மற்றும் தெற்கு திசையில் பரவியுள்ள மேக கூட்டங்களாலும், வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கோடை மழை நீடிக்கும் என இந்திய வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது :- தமிழகத்தில் பல இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. மழைக்கு இன்னும் காத்திருக்க வேண்டும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. மார்ச் 1-ந் தேதியில் இருந்து இயல்பான அளவை தாண்டி மழை பெய்துள்ளது.

இந்தக் கால கட்டத்தில் சராசரியாக 79.5 மி.மீ. மழை தான் கிடைக்கும். ஆனால், இந்த முறை 86 மி.மீ. மழை பெய்து கூடுதலாக 8 சதவீத மழை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதிக்கு முன்பே தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக புனே வானிலை மையம் ஆய்வு செய்து தெரிவித்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...