குட்கா வழக்கு: கோவை தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன்

கோவை: கோவையில் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோருக்கு கோவை விடுமுறைகால நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.


கோவை: கோவையில் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோருக்கு கோவை விடுமுறைகால நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குட்கா ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ., நா.கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இரண்டு பேரும் தினமும் சூலூர் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...