யானைகள் ஊடுருவலுக்கு எச்சரிக்கை விடுக்கும் கருவி: மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய கருவிகளை மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணியினை வனத் துறைனர் தொடங்கியுள்ளனர்.


மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய கருவிகளை மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணியினை வனத் துறைனர் தொடங்கியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற பகுதிகளில் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, எதிர்படும் மனிதர்களையும் தாக்குகிறது. இதன் காரணமாக, வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவானது.

புதிய கருவி

இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வனத்தையொட்டியுள்ள ராயர் ஊத்துப்பதி என்ற கிராமத்தில் உயரமான ஒரு கட்டிடத்தின் மீது எச்சரிக்கை கருவி (ELEPHANT ALERT) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவியின் மேற்பகுதியில் சிகப்பு மின் விளக்கும், சப்தம் எழுப்பும் 'சைரனும்' பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் எண்களை பதிவு செய்வதற்கான சிம் கார்டு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.



வனத்தைவிட்டு யானைகள் வெளியேறியதாக தகவல் கிடைக்கும் பட்சத்தில், வனத்துறையினர் இந்த கருவிக்கு ஒரு 'ரிங்' விடுவார்கள். அடுத்த நொடியே மேலே உள்ள சிகப்பு விளக்கு எரிவதோடு, மூன்று கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சப்தம் கேட்கும் அளவிற்கு சைரன் பலத்த ஒலி எழுப்பத் தொடங்கிவிடும். இதனையடுத்து, கிராம மக்கள் தங்களது பகுதியில் யானைகள் நடமாட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கலாம். மேலும், வெளியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடலாம்.

பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரின் இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, இது போன்ற எச்சரிக்கை கருவிகளை மலையோர கிராமங்களில், மொத்தம் 47 இடங்களில் பொருத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது போன்ற முன்னெச்சரிக்கை கருவிகளை, யானைகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் பல்வேறு இடங்களிலும் பொருத்த மாவட்ட வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...