வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் அழகிய கொன்றைப் பூக்கள்

கோவை : வால்பாறையில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.

கோவை : வால்பாறையில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். 

கோடை விடுமுறை காரணமாக, ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

ஆழியாரிலிருந்து 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து தான் வால்பாறையை சென்றடைய வேண்டும். அந்த கொண்டை ஊசி வளைவுகளில் சாலைகளின் இருபுறமும் மஞ்சள் நிறத்தில் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அவ்வாறு, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது இந்த கொன்றைப் பூக்கள். 

வால்பாறையில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நேரத்தில், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி சேர்க்கைக்காக தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டி கட்டாயத்தில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் கோடை விழாவைக் காண முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வருடம் வால்பாறையில் முன் கூட்டியே கோடை விழா தொடங்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மழை: 



வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய சுற்றுலாப் பகுதியான கூழாங்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளித்து மகிழ்கின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...