மலர் கண்காட்சியையொட்டி நீலகிரியில் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை சீசன் கொண்டாடப்படுவது வழக்கம். இச்சமயங்களில் வரும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு சற்று மவுசு அதிகம். இதனைக் காண உலக முழுவதிலும் இருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு 122-வது மலர் கண்காட்சி 18-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைவரும் மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கும் வகையில், 18-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ம் தேதி விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் 25-ம் தேதி இம்மாவட்டத்திற்கு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...