கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் 24 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பல இடங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. மேலும், 13-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருச்சி மாவட்டம் துவக்குடி மற்றும் மதுரையின் வடக்கு பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில், மேலூரில் 60 மி.மீ. மழையும், துவக்குடி (இஸ்ரோ)வில் 57 மி.மீ. மழையும், மதுரை (இஸ்ரோ) 42 மி.மீ. மழையும், பாலக்கோடு 40 மி.மீ. மழையும், பெருந்துறை 31 மி.மீ. மழையும், போடி நாயக்கனூர் 26 மி.மீ. மழையும், கோவை (பெரிய நாயக்கன் பாளையம்) மற்றும் விருதுநகரில் தலா 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.



இனி வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழகம், கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது, இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...