தமிழகத்தை புழுதி புயல் தாக்க வாய்ப்பு உள்ளதா?: வேளாண் பல்கலை., விளக்கம்

கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த இந்த புயலால் வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த புழுதி புயல் தமிழகத்தை தாக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், "தமிழகத்தை புழுதி புயல் தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது, சுழல் காற்று காரணமாக நிலத்தின் மீது உள்ள மண், காற்றில் கலந்து புழுதி புயல் ஏற்படுகின்றது. வடமாநிலங்களில் மண்ணின் பிடிப்புத் தன்மை குறைவு.

வடமாநிலங்களில் வீசக் கூடிய காற்றைப் போல் தமிழகத்தில் வேகமாக காற்று வீசாது. அதே நேரம் தமிழகத்தில் உள்ள மண்ணின் பிடிப்புத் தன்மை அதிகம். ஆகையால் புழுதி புயல் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மழை-வெயில்

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர வெப்பநிலையானது குறைந்துள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேர வெப்பநிலையானது 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.காற்றின் வேகம் 12 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து, இரண்டு நாட்களுக்குள் குறைந்து 8 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது." என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...