ஐந்தாவது நாளாக தொடரும் நீலகிரி தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் போராட்டம்

நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேறி பூங்கா உட்பட 5 பூங்காக்கள், 9 பண்ணைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் 463 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வாராந்திர விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தோட்டக்கலை இணை இயக்குநர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், அரசிடமிருந்து பதில் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.



இருப்பினும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகள், பாத்திகள் பராமரிப்பு பணிகள் 5-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.



இந்த போராட்டம் தொடரும்பட்சத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஏற்பாடு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...