தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோவினர் கைது: சென்னையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் உயிரிழப்பு

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.


பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து வருகின்றனர். 

மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று  முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.



இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்செயலகம், மற்றும் சேப்பாக்கம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து சென்னையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசு ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்கின்றனர். இன்று பிற்பகலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூடி வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுப்போம் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி சென்னை பல்கலைக்கழகம் அருகே தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எழும்பூர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது, ஆசிரியர் தியாகராஜன் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற தியாகராஜன் பாபநாசம் அரசுப் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக இருந்தவர் ஆவர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...