திருப்பூரில் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி 16-ம் தேதி தொடக்கம்

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து, இந்திய பின்னலாடை கழக தலைவர் சக்திவேல் கூறுகையில், "இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு சிறப்பான ஏற்றுமதியை மேற்கொண்டு இந்தியாவிற்கு போட்டி நாடாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் சார்பில் 45-வது பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளோம். 

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் 60 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது. 

அதில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பங்கு பெற உள்ளனர். கடந்த ஆண்டு 300 முதல் 400 கோடி வரை வர்த்தக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக வர்த்தக விசாரணை மேற்கொள்ளப்படும். நீண்ட கால வர்த்தகத்திற்கு இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...