திருப்பூர் பஞ்சு அரவை மில்லில் தீ : பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் தீக்கிரை

திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.



மங்கலம் அருகேயுள்ள வேட்டுவபாளையத்தில் சையது இப்ராஹீம் என்பவருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு அரவை மில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மில்லின் உள்ளே திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பஞ்சு என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 



இது குறித்து தகவலறிந்த, தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான, டன் கணக்கில் பஞ்சுகள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...