சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இரு திருமண மண்டபங்களை தனியார் அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இதனையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம், திருக்கோயில் வசம் திருமண மண்டபங்களை ஒப்படைக்கத் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள மண்டபத்தின் சாவிகளை திருக்கோயில் வசம் ஒப்படைக்காமல் திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...