கோவை: கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் மருந்து தரக் கட்டுப்பாடு குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேலுமணியம்மாள் அரங்கில், 'மருந்து தரக் கட்டுப்பாடு, உத்திரவாதம் மற்றும் மேலாண்மை' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தகக் கல்வி நிறுவனத்தின் பார்மஸி துறை சார்பில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கூட்டு நிர்வாக இயக்குநர் டி. லட்சுமிநாராயணசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர், இந்திய மருத்துவத் துறையின் சேவை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.