மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக தோற்றுவிட்டது. நீட் வேண்டாம் என தமிழகம் போராடியதற்காக, மாணவர்களை மத்திய அரசு அலைக்கழித்துள்ளது. கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. மாணவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, அவரின் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

ஆளுநர் மீது நிர்மலா தேவி எழுப்பிய புகார்களின் நிலை என்ன? கருத்தியல் ரீதியாக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து வருவதால் பா.ஜ.க., அரசு வன்மத்துடன் எங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சசிக்குமாரின் கொலை வழக்கு மட்டும் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்? உக்கடம் மேம்பாலம் கட்டுமானம் தொடர்பாக மக்களிடையே உள்ள சந்தேகங்களை களைந்துவிட்டு, ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...