பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவையில் சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சக்தி சேனா இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களை மாலையாக அணிந்து தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கண்டித்ததை தொடர்ந்து பூரண மது விலக்கை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், "சமூக விரோத செயல்கள் அதிகரிக்க மதுவே காரணம். தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக நெல்லையில் தினேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனை மனதில் கொண்டு பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...