கோடை மழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு உத்தரவு

கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கோவை நகரில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள பிரதான குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், மழைக்கு நடுவே சூறாவளிக்காற்று வீசுவதால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைகின்றன. ட்ரான்ஸ்ஃபாமர்கள் வெடித்து சிதறுகின்றன. இதனால், இரவு நேரங்களில் பல மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நகரின் முக்கியமான சாலைகளில் மரங்கள் வேரோடு முறிந்து வாகனங்கள் மீது விழுகின்றன. இதுமட்டுமில்லாமல், முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும், ரயில்வே பாலங்களின் கீழ் பகுதியிலும், மழைநீர் தேங்கிக் கொள்வதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களின் உதவியோடு அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, ஆபத்து காலங்களில் உதவும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தயாராக இருக்குமாறு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...