கோவை - செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் : சேலம் கோட்ட மேலாளர்

கோவை: கோவையில் இருந்து பரிட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வே தலைமையிடம் வலியுறுத்தப்படும் என கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட மேலாளர் யு.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து பரிட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வே தலைமையிடம் வலியுறுத்தப்படும் என கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட மேலாளர் யு.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.

புதிய மண்டல மேலாளராகப் பதவியேற்ற பின் கோவைக்கு வந்த யு.எஸ். ராவ் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " மண்டல மேலாளராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கோவை ரயில்நிலையம் வந்துள்ளேன். தமிழகத்தில் இரண்டாவது முக்கிய நகரமான கோவையில், பயணிகளின் வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளில் ஏதேனும் குறை இருந்தால் அதனை உடனே நிவர்த்தி செய்வேன். 

பயணிகள் வசதிக்காக முதல் லிப்ட் சில நாட்களில் இயக்கப்பட உள்ளது. இரண்டாவது லிப்ட் ஆறு மாதத்திற்குள் இயக்கப்படும். 

ரயில் நிலையத்திலுள்ள 4 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலாளர் அறை அருகே உணவுக்கூடம் அமைப்பதற்குப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. வருகின்ற வருடங்களில் பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு செயல்பட உள்ளோம்.

நகரும் படிக்கட்டுகள் மின்சார பற்றாக்குறையின் காரணமாக அவ்வப்போது இயங்கவில்லை. விரைவில் அது சரிபடுத்தப்படும்.

இரு அடுக்கு ரயில் கோவையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு சேலம் கோட்டத்தின் சார்பாக அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அடுக்கு ரயில் சேவைக்கான நேரம் மற்றும் தேதி இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கப்படும். பரிட்சார்த்த முறையில் செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. பயணிகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த ரயில்களை மீண்டும் இயக்கத்  தலைமையிடத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு தற்போது ரயில்கள் அதிகப்படுத்த வாய்ப்பில்லை," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...