குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்பு உள்ளது : கோவையில் ஸ்டாலின் பேட்டி

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார்.

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரிக்கும் ஆலையில் கடந்த வாரம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க தொண்டர்கள் அந்த ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதில், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். இது பழிவாங்கும் செயல் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், கைதைக் கண்டித்து கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை சந்தித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி-க்கு தொடர்பு உள்ளது. நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி , கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். உண்மை வெளிவர போராடியதிற்கு தி.மு.க தொண்டர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தது சர்வாதிகாரம் போன்றது. 

எனவும், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறைக்கு செல்வதை மறைப்பதற்காக இதெல்லாம் நடக்கிறது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தும். அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். விஜயபாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். தண்டனையில் இருந்து தப்பிக்க இது போன்ற பொய் வழக்குகளை தி.மு.க தொண்டர்கள் மீது பதிவு செய்து வருகின்றனர்" என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...