ஆளில்லா விமானத்தை உருவாக்க 'எம்.ஐ.டி.' கல்லூரிக்கு ஆலோசகரானார் நடிகர் அஜித்

சென்னை : சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்க இருக்கும் நவீன ஆளில்லா விமானத்திற்கு ஆலோசகர் மற்றும் சோதனை பைலட்டாக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை : சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்க இருக்கும் நவீன ஆளில்லா விமானத்திற்கு ஆலோசகர் மற்றும் சோதனை பைலட்டாக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் அஜித்குமார் விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார். அதே நேரத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும் திறமை பெற்றுள்ளார். அவர் ஆளில்லா விமானங்களை இயக்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இந்நிலையில் அஜித்-க்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது.

ஆளில்லா விமானம் மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் குழுவுக்கு உதவி செய்ய அஜித்குமாரை எம்.ஐ.டி. நியமித்துள்ளது. அவர் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் கல்லூரிக்கு அவர் வந்து செல்லும் போதும் அவருக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது. அந்த பணத்தை கல்லூரி ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு வழங்கியுள்ளார் அஜித். 

இதனால் குஷியான அவரது ரசிகர்கள், இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...