நுரையுடன் பவனி வரும் நொய்யல் : சாய ஆலைகளால் பாழாகும் வாழ்வாதாரம்

திருப்பூர் : மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்வதையறிந்த சாய ஆலை உரிமையாளர்கள் அதில் சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் நுரை பொங்கப் பாய்ந்து சென்றது.

திருப்பூர் : மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்வதையறிந்த சாய ஆலை உரிமையாளர்கள் அதில் சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் நுரை பொங்கப் பாய்ந்து சென்றது. 



திருப்பூர் மாவட்டத்தின் ஜீவ நதியாக விளங்கி வந்த நொய்யல் ஆறு தற்போது சாக்கடை கழிவுகள் செல்லும் பெரிய கால்வாயாக மட்டுமே உள்ளது. இந்த நதியில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. மற்ற நேரங்களில் வற்றிய நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக, சாய ஆலை அதிபர்களால் இந்ந நதி மூலம், சாயக் கழிவுகளை வெளியேற்ற முடியாத சூழல் இருந்து வந்தது.

 

பொதுவாக 'ஜிரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் முறையில் சாய கழிவு நிரை சுத்திகரித்தால், அந்த தொழிலதிபர்களின் லாபம் குறையும். அதனால், மழை நேரங்களில் நொய்யல் நதியில் செல்லும் நீரில் சாய ஆலைக் கழிவுகளை வெளியேற்றி நிம்மதி கொள்கின்றனர்.

சாய ஆலைக் கழிவுகளை வெளியேற்றக் கூடாது என நீதி மன்றங்கள் தீர்ப்பளித்தும் தொடர்ந்து சாய ஆலைகள் வெளியேற்றும் சாயக் கழிவுகளால் இந்த நதியில் செல்லும் நீரை நம்பியிருந்த சில விவசாயிகளும் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி விட்டனர். தொடர்ந்து சாய கழிவுகளை நொய்யல் நதியில் விட்டதால், நொய்யலை நம்பி இருக்கும் ஓரத்துப்பாளையம் அணை, மக்கள் பயன்படுத்த முடியாத நஞ்சு மிகுந்த கழிவுகள் கொண்ட அணையாக மாறியுள்ளது. மேலும், இந்த அணையைச் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களும் மலட்டுத் தன்மை அடைந்துள்ளது.



மனிதர்கள் பேணிக்காக்க வேண்டிய வளங்களில் மிக முக்கியமானது நீர் வளம். அதனைத் தூய்மையாக வைத்திருக்கவும், பேணிக்காக்கவும் பொதுமக்கள் மட்டும் முயன்றால் போதாது, மாசு ஏற்படுத்தும் ஆலைகளும் அதனைக் கண்காணிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தம் பணியை உணராமல் இந்த சீர்கேடு என்றும் மாறாது. 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...