சின்ன வெங்காயத்தின் விலை நிலையாக இருக்கும்

கோவை : சின்ன வெங்காயத்தின் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால், சின்ன வெங்காயத்தின் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கோவை : சின்ன வெங்காயத்தின் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால், சின்ன வெங்காயத்தின் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசம்; ஆகியவை சின்ன வெங்காயம் விளைவிக்கும் முக்கிய மாநிலங்களாகும்.

தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்றது. கோ1, கோ2 மற்றும் கோ5 ஆகிய இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கேற்ப கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு தமிழகம் சின்ன வெங்காயம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வர்த்தக ஆதாரங்களின் படி தற்போதைய பருவத்தில் சின்ன வெங்காயத்திற்கான ஏற்றுமதி தேவை குறைவாக உள்ளது. 

இந்தியாவில் சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது தாராபுரம், பல்லடம் மற்றும் உடுமலைபேட்டை ஆகிய இடங்களிருந்து வரத்து திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைளுக்கு வருகிறது. மைசூரிலிருந்து சின்ன வெங்காய வரத்து சந்தைக்கு, ஜுன் மாதத்திலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் அறுவடை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் - விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 25 இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

மைசூரிலிருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்தைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...