குட்கா விவகாரம் : சீல் வைக்கப்பட்ட பொருட்களை அரசு அதிகாரிகள் இன்றி திறந்த போலீசார்

கோவை : கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களை கிராம நிர்வாக அலுவலர் , தாசில்தார் என்று எந்த அதிகாரிகளும் இல்லாத நிலையில் குட்கா பொருட்களை போலீசார் பேக்கிங் செய்வதாக கூறியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கோவை : கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களை கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் என்று எந்த அதிகாரிகளும் இல்லாத நிலையில் குட்கா பொருட்களை போலீசார் பேக்கிங் செய்வதாக கூறியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் சோதனை நடத்தினர். 

சுமார் 15 மணி நேரம் நீடித்த சோதனையின் அடிப்படையில் 750 கிலோ குட்காவும், 20 டன் மூலப்பொருட்களும், 3 லட்சத்து 24 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக குட்கா ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயின் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதில் 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இதில், குட்கா ஆலை தொடர்பான விசாரணையை வெளிப்படைத்தன்மையாக நடத்தக் கோரி, ஆலையின் முன்பாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலைக்குள் இன்று காலை 10 மணி அளவில் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நுழைந்தனர். 

'எதற்காக மீண்டும் காவல்துறையினர் ஆலைக்குள் சென்றுள்ளார்கள்?' என்று டி.எஸ்.பி ஜெயச்சந்திரனிடம் கேட்ட போது, "கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க குட்கா பொருட்களை பேக்கிங் செய்யும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 

கிராம நிர்வாக அலுவலர் , தாசில்தார் என எந்த அரசு அதிகாரிகளும் இல்லாத நிலையில், காவல் துறையினரே தன்னிச்சையாக குட்கா பொருட்களை பேக்கிங் செய்வதாக கூறியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. 

சீல் வைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சீலை பிரிக்க வேண்டுமானால் அந்த ஊரின் அரசு அதிகாரிகள் முன்னிலையில் தான் பிரிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் காவல் துறையினரின் இந்த செயல்பாடுகள் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...