அடுத்தடுத்த இருநாட்களில் 3 கைதிகள் உயிரிழப்பு: கோவை மத்திய சிறையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளில், கடந்த இருநாட்களில் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளில், கடந்த இருநாட்களில் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா வழக்கு ஒன்றில் கைதாகி சொக்கநாதன் என்பவர் கடந்த 16-ம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று, வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சொக்கநாதன் உயிரிழந்தார். அதேபோல, பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி, கோவை மத்திய சிறையில் இருந்த மற்றொரு கைதியான சீனிவாசன், திடீரென சிறையில் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.



இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதியான உதயகுமார் என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் சிறையில் இருந்த இரு கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது, மேலும் ஒரு கைதி இறந்திருப்பது அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர் சிறை மரணங்களால், கோவை மாவட்ட சிறைச்சாலையின் மருத்துவ சிகிச்சை முறை பற்றியும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தத் தொடர் மரணங்களால் கோவை மத்திய சிறையில் மருத்துவ வசதிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...